கொக்கிளாய் கர்நாட்டு கேணிப்பகுதியில் நேற்று ஞாயிற்றுக்கிழமை (15) இரவு குடும்பஸ்தர் ஒருவர் அடித்து கொ லை செய்யப்பட்ட சம்பவம் இடம்பெற்றுள்ளது.
சம்பவத்தில் கண்டியைச் சேர்ந்த 38 வயதுடைய நபரே உயிரிழந்துள்ளார்.
தொழில் காரணமாக கண்டி, நுவரெலியா பகுதியில் இருந்து வந்த இருவர் முல்லைத்தீவு கொக்குளாய் கர்நாட்டு கேணிப்பகுதியில் வாடியில் தங்கியிருந்துள்ளார்கள்.
சம்பவத்தன்று குறித்த இருவரும் போதைக்கு அடிமையாகி இருந்த நிலையில், வாய்த்தகராறு ஏற்பட்டுள்ளது. அதன் பின்னர் வாய்த்தகராறு கைகலப்பாக மாறிய நிலையில் நுவரெலியா பகுதியில் வசிக்கும் குடும்பஸ்தர் கண்டியில் வசிக்கும் மற்றைய நபரை அடித்துக் கொ லை செய்துள்ளார்.
சம்பவம் தொடர்பாக கொக்குளாய் பொலிஸாருக்கு தகவல் வழங்கப்பட்டதனை தொடர்ந்து சம்பவ இடத்திற்கு விரைந்த பொலிஸார் மரணமடைந்த நபரை வைத்தியசாலையில் பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்துள்ளனர்.
குறித்த சம்பவத்துடன் தொடர்புடைய நுவரெலியா மஸ்கெலிய பிரதேசத்தை சேர்ந்த 42 வயதுடைய சந்தேகநபர் பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளார்.
சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை கொக்குளாய் பொலிஸார் மேற்கொண்டு வருவதாக தெரிவித்துள்ளனர்.