யாழ்ப்பாணம் சுன்னாகத்தை சேர்ந்த நபர் ஒருவர் நேற்றையதினம் (29) பயங்கரவாத விசாரணைப் பிரிவினரால் கைது செய்யப்பட்டுள்ளனர்.
மனோகரன் கஜந்தரூபன் என்ற நபரே யாழ்ப்பாணப் பயங்கரவாத பிரிவு அதிகாரிகளால் அவரது இல்லத்தில் வைத்து கைது செய்யப்பட்டுள்ளார். குறித்த சந்தேக நபரின் முகநூல் பதிவொன்று தொடர்பிலான விசாரணைக்காகவே கைது செய்யப்பட்டுள்ளதாகவும் பொலிஸார் குறிப்பிட்டுள்ளனர்.
கைதான சந்தேக நபர் இன்றையதினம் (30.11.2024) நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட உள்ளார்.
யாழ்ப்பாணத்தில் நீண்ட காலத்தின் பின்னர் இவ்வாறு கைது நடவடிக்கை இடம்பெற்றுள்ளமை குறிப்பிடத்தக்கது.