கொழும்பு மத்திய தபால் பரிமாற்ற நிலையத்துக்கு தாய்லாந்திலிருந்து விமான தபால் சேவை மூலம் அனுப்பி வைக்கப்பட்ட குஷ் போதைப்பொருள் அடங்கிய பொதிகளுடன் மூன்று சந்தேக நபர்கள் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸ் போதைப்பொருள் தடுப்பு பிரிவினர் தெரிவித்தனர்.
பாதுக்க ,ஹோமாகம மற்றும் களுத்துறை ஆகிய பிரதேசங்களில் வசிக்கும் 33, 36 மற்றும் 48 வயதுடைய மூவரே கைது செய்யப்பட்டுள்ளனர்.
இது தொடர்பில் தெரியவருவதாவது,
கொழும்பு மத்திய தபால் பரிமாற்ற நிலையத்துக்குக் தாய்லாந்திலிருந்து விமான தபால் சேவை மூலம் கடந்த செவ்வாய்க்கிழமை (19) 02 பொதிகள் அனுப்பி வைக்கப்பட்டுள்ளன. இதன்போது சுங்க அதிகாரிகளால் மேற்கொள்ளப்பட்ட சோதனையில் குறித்த பொதிகளிலிருந்து 10 கிலோ 274 குஷ் போதைப்பொருள் கைப்பற்றப்பட்டுள்ளது.
இதனையடுத்து இந்த பொதிகளைக் கொண்டு செல்வதற்காக வருகை தந்திருந்த மூன்று சந்தேக நபர்கள் பொலிஸ் போதைப்பொருள் தடுப்பு பிரிவினரால் கைது செய்யப்பட்டுள்ளனர்.
இது தொடர்பான மேலதிக விசாரணைகளை பொலிஸ் போதைப்பொருள் தடுப்பு பிரிவினர் மேற்கொண்டு வருகின்றனர்.